Monday 20 July 2015

சோதிடமும்- சோதிடர்களும்.--- இரண்டாம் கட்டுரை / 21-07-2015.


சோதிடமும்- சோதிடர்களும். 
   இரண்டாம் கட்டுரை


தமிழ் சோதிட உலகத்தினரே வணக்கம். 


ஆம் இது ஏமாற்றும் காலமாகும். மக்களை எப்படியெல்லாம்  ஏமாற்றமுடியுமோ அப்படியெல்லாம் ஒருவரை ஒருவரை ஏமாற்றிக்கொள்கின்றனர்…. அதற்கு பக்க பலமாக பல அமைப்புகள் இருக்கின்றன….. அவற்றில் ஒன்று இந்த சோதிடக்கலையுமாகும்..


பூர்வ புண்ணியம் என்ற ஒன்றைச் சொல்லி ஏமாற்றும் வித்தை இந்திய சமயங்கள் அனைத்திலும் உள்ளன. இந்து சமயம் ((((((((((( இப்படி ஒரு சமயமே இல்லை என்போர் இருக்கின்றனர்.. இதை சனாதன தர்மம் - வைதீக சமயம் என்றெல்லாம் மாற்றிக் கூறுவர்…)))))))))))) இப்பொழுதும் இந்துசமயம் இருக்கிறது .. ஆனால் வழிபாடும், ஆகமங்களிலும் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னர் ஹோமத்தில் உயிர் பலி கொடுக்கப்படும் .இப்பொழுது அதற்கு பதிலாக சிறிய வேள்வி குண்டம் அமைத்து பட்டுத் துணிகள் பலியிடப்படுகின்றன…


இந்தியாவில் உள்ள சமயங்களில் இனக்குழு சமயத்திற்கு அடுத்தாற்போல் பழமையான சமயம் இந்து சமயமாகும். இச்சமயத்தின் ஆணிவேர்கள்- புனிதம்- தீட்டு- பூர்வபுண்ணியம் போன்றவையாகும்.. முற்பிறப்பு – அடுத்த பிறப்பு பற்றி பேசும் அமைப்பாகும். அதனால் முற்பிறப்பில் செய்த தீய கர்மங்களுக்கு, இப்பிறப்பில் நன்மை செய்தால் , அடுத்தபிறவியில் நன்மை கிடைக்கும் என்ற அடிப்படையான கொள்கையுடையதாகும்… இந்த கொள்கை இறைவணக்க பரிகாரமாகவே இருக்கிறது…. இவ்வாறு இறைவனை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பதாகும்… கி.பி. 700 க்கு முன்னர் அனைத்து ஹிந்து சமய ஹோமத்திலும் உயிர்கள் பலியிடப்பட்டன. இதற்கு பின்னர் இந்து சமயம் வழிபாடுகள் மாற்றப்பட்டு கோயில், சிலை வழிபாடுகள் உள்ள சைவ சமயம், வைணவ சமயங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதற்கு காரணமாக அமைந்தது கி.மு. 600 முதல் கி.பி.700 வரை எழுச்சி பெற்றிருந்த சமண சமயமும் , பௌத்தசமயமும் ஆகும்.. இவற்றை விளக்கமாக தனியொரு பகுதியாக எழுதுகிறேன்..

(((( யூதசமயம்-- கிறித்துவசமயம்----இஸ்லாம் சமயத்தினர்க்கு முதல் ஜென்மமும் இல்லை..அடுத்த ஜென்மமும் இல்லை... உலகின் மக்கட் தொகையில் ஏழில், நான்கு பங்கு உள்ளனர்.... இவர்களுக்கு பூர்வ ஜென்ம அறிவே கிடையாது.....அதனாலேயே இறுதி தீர்ப்பு நாளுக்காக கல்லறையில் படுத்துக்கிடக்கிறார்கள்.. )))))))))))

இவ்வாறு சமய நம்பிக்கை கொண்ட பூர்வபுண்ணியம் சோதிடத்தில் இணைக்கப்பட்டு பரிகார லீலைகளை கட்டவிழ்த்துள்ளனர். இதனால் தற்கால சோதிடர்களும் இந்த பூர்வ புண்ணியம் என்று ஒன்று உண்டு என நம்பி மக்களிடம் தீய பெயர் எடுக்கின்றனர்.

பூர்வ புண்ணிய தோசங்களைக் கூறுவது ,அதைச் சொல்லி பரிகாரம் செய்வது அந்த அந்த ,சமயப் பெரியோர்களின் நம்பிக்கை வாய்ந்த செயல்களாகும்… இதில் சோதிடம் எங்கு வந்தது…… சோதிடத்தில் பூர்வ புண்ணியத்தை சொல்லி பரிகாரச் செயலுக்கு பெரிதும் அடிகோலியது நாடி சோதிடம் என்று ஒரு பொய்யான ஓலைச் சுவடிகளை தயாரித்து ஏமாற்றிக் கொண்டிருக்கும் அமைப்பாகும்…


நாடி சோதிடம் என்ற ஓலைச் சுவடி பார்க்கும் அமைப்பை நம்மவர் எவரும் கற்றுக் கொள்ள முடியாது…. இந்த அமைப்பு குறிப்பிட்ட குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு மட்டுமே கற்றுக் கொடுக்கப்படும்… பல முனிவர்கள், ரிஸிகள், கடவுள்கள் பெயரால் நாடிப் பலன்கள் வாசிப்பர்…. இவற்றில் முன்ஜென்மப்பலன்கள் கூறி அதற்கு பரிகாரம் செய்ய சொல்வார்கள்…((((( இந்த நாடி சோதிடம் கடந்த நூறு ஆண்டுகளாக பொதுமக்களிடம் பயன் படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது இப்படியெல்லாம் எந்த ஒரு ஓலைச் சுவடியும் இல்லை என்று தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தார் கூறும் அளவிற்கு பொய்யாகவும் உள்ளது….முகநூல் சோதிடர்சபை தஞ்சையில் நடந்த கூட்டத்தில் இதைப்பற்றி நூலகத்தார் பேசினர்..))))))))))))))))))))) இந்நிலையில் உள்ள  இந்த பரிகார அமைப்பு படிப்படியாக அனைவரும் பார்க்கும் நமது சோதிடத்திலும் இணைத்து விட்டனர். (((( தற்கால சோதிட நூல்களில் தான் அதிகமாக எழுதியுள்ளனர்..)))))


சோதிடம்,,, வானசாத்திரம் என்ற கணிதத்தை அடிப்படையாகக் கொண்டது என்றால் ஆய்வு செய்யப்பட வேண்டும் … சமயக் கருத்துக்களான பரிகாரம் கூறக்கூடாது…



இல்லை சோதிடம் சமயம் சார்ந்தது என்றால் ,,, வானசாத்திரமான கணிதத்தை அடிப்படையாகக் கொண்டு பலன்கள் கூறக்கூடாது…. அருள் வாக்கு சோதிடராக இருக்கலாம்…..


இரண்டுமில்லாமல் கடவுளைச் சொல்லி ஏமாற்றிக் கொண்டும்., வானசாத்திரத்தையும் எடுத்துக் கொண்டும் பலன்கள் கூறுவது என்பது தங்களையும், மக்களையும், சோதிடத்தையும் ஏமாற்றும் செயலன்றி வேறு என்ன சொல்ல… எதைச் சொல்ல..
                                                                                                                                                                                        தொடரும்…………
பேராசிரியர். முனைவர்.தி.விமலன்..
#ஜோதிடம் #வான சாத்திரம் #கடவுள் #பரிகாரம்