Wednesday 1 April 2015

உங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 2 . 01-04-2015 #RAJAYOKAS.


உங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 2 .

ரஜ்ஜு யோகம் என்பது குறைவான காலங்களிலேயே நிகழகக்கூடும்.. ஏனெனில் கோள்கள் அனைத்தும் சர இராசிகளில் இருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு சர இராசியிலாவது இருக்கவேண்டும்.

கி.பி. 03-02-1962 மாலை 17.30 இ.பொ.நே. முதல் 05-021962 மாலை 17.30 இ.பொ.நே. வரை அனைத்து கோள்களும் மகரம் இராசியில் இருந்துள்ளன. மகரம் சர இராசியானதால் அதற்குரிய பொதுப் பலன்களில் சாதகர் வாழ்வார் எனலாம்.. ஆனால் பன்னிரெண்டு இலக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேற்கூறப்பட்ட பொதுப் பலன்களுடன் கோள்கள் ஒவ்வொரு பாவகத்தின் அடிப்படையிலும் ஏற்படுத்தும் பலன்களையும் இணைத்துக் கூறவேண்டும்.

திரும்பவும் இம்மாதிரி அனைத்துக் கோள்களும் மகரத்தில் இணைவது நமது வாழ்நாளில் கிடையாது.

இதேமாதிரி இராகு, கேது நீங்களாக மற்ற ஏழு கோள்களும் சர இராசிகளான இரண்டில் இருந்துள்ளன. கி.பி 25-04-1941 மாலை 16-30 இ.பொ.நே. முதல் 26-04-1941 மாலை 16-30 வரை மேச சர இராசியில் சூ,சந்,பு,வி,சு,சனி, ஆகிய ஆறு கோள்கள் இருந்துள்ளன. செவ்வாய் ஒரு கோள் மட்டும் மகர சர இராசியில் இருந்துள்ளது.

நன்கு கவனியுங்கள் இரண்டு நிலைகளிலும் எத்தனை ஜாதகங்கள் பிறந்திருக்கும் என்று சிந்தித்துப் பார்த்தால் மிகக் குறைவகவே பிறப்பு இருந்திருக்கும். அதுவும் பாவக ரீதியாக கணித்தால் சாதாரணமாகவே எடுத்துக்கொள்ளும் நிலை ஏற்படும்…..

முஸல யோகம்;


அனைத்துக் கோள்களும் ஸ்திர இராசியில் இருப்பது முஸல யோகமாகும். ஸ்திரஇராசி என்பது இரிஸபம், ஸிம்மம், விர்ச்சிகம், கும்பம் ஆகும். இந்த நான்கு இராசிகளிலோ அல்லது இதில் உள்ள ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்றிலோ  கோள்கள் இருக்கலாம்.
இந்த யோகத்தில் பிறந்தவர் செல்வந்தராவார். பெருமையும் கீர்த்தியுமுடையவர். அனைத்து செயல்களிலும் வெற்றியுடையவராவார்.

கூடுதலான பொதுப்பலன்களையும் காண்போம்;

இரிஸபராசியானால் : ஆடம்பரங்கள் அனைத்தையும் அனுபவிப்பவராகவும், அனேக மனைவிகளுடையவராகவும், அல்லது காதலர்கள் உடையவராகவும் , வாகனங்களும், கால்நடைகளும், வேளாண்மை நிலங்களும் உடையவராகவும், கூடுதலான மக்கட் செல்வம் உடையவராகவும் திகழ்வர்.

ஸிம்ம இராசியானால் : அதிகாரம் செய்வதில் விருப்பமும், எதிர்பாராத மக்கள் தொடர்புகளும், அரசனாகும் யோகமும் , அனைத்து சுகங்களையும் அனுபவித்தலும், பழமையை விரும்புதலும் மனைவிகளினால் சங்கடங்களை அனுபவித்தலும், அரசாங்கத்தினரால் போற்றப்படுதலும் போன்ற பலன்களை அனுபவிப்பார்.

விர்ச்சிக இராசியானால் ; வெகுளியும், கொடூர எண்ணங்களும், சுயநலமும், பிறர் மனைவிகளிடம் மயக்கமும், சிற்றின்பப் பிரியராகவும், நிதானம் இழத்தலும், சந்தேக குணங்களுடன் சிறப்பாக, செல்வத்துடன் வாழ்வார்.

கும்ப இராசியானால் ; சுயநலமும், பொறாமைக் குணமும், வேண்டா வெறுப்பாகவும், தன்னடக்கம் என்று கூறிக்கொள்பவராகவும், தம்பட்டம் அடித்துக் கொள்வதும், கருமியாக செயல்படுதலும், அனைத்து சுகங்களை அனுபவித்தலும், தனிமையாக இருத்தலும் போன்ற பலன்களை அனுபவித்தலாகும்….

இந்த நிலைகளில் அனைத்துக்கோள்களும் ஸ்திர இராசியில் இருப்பது மிகவும் அபூர்வமாகும். வேண்டுமானால் கணித்துப் பார்த்துக்கொள்க..

நலயோகம் ;


அனைத்துக் கோள்களும் உபய இராசிகளில் இருப்பது நலயோகமாகும். உபய இராசி என்பது மிதுனம், கன்னி, தனுசு, மீனமாகும்.. இந்த நான்கு இராசிகளிலோ அல்லது இதில் உள்ள ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்றிலோ  கோள்கள் இருக்கலாம்.

இந்த யோகத்தில் பிறந்தவர் செல்வந்தராவார்..அங்கத்தில் குறையிருக்கும். செயலகளில் திறமையிருக்கும். தனக்கென்று ஒருகருத்துடன் செயல்படுபவராவார்.

கூடுதலான பொதுப்பலன்களையும் காண்போம்;

மிதுன இராசி ; மிகவும் திறமையுடனும், சுயநலத்துடன் காரியங்களில் செயல்படுதலும், நல்லதொரு வியாபார நோக்கமும், மகிழ்ச்சியுடன் இருத்தலும், தனது இயலாமையை வெளியில்காட்டாமலும், புறம் பேசுவதும், செல்வம் சேர்ப்பதில் ஆர்வமும் இருக்கும்.

கன்னி இராசி : பிரச்சனைகளை எதிர்கொண்டு சமாளிப்பதும், பணிகளுடன் மற்றவர் நவடிக்கையில் கவனமாக இருத்தலும், போராடுவதும், திறமையானவர் என்று தனது புகழ் பேசுபவரும், பணமே வாழ்வு என்று இருப்பதும் , மற்றவரின் பேச்சை மதிக்காமலும் இருப்பர்.

தனுசு இராசி ; தனக்கென்று ஒழுக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுதலும், திறமையும், கல்விகளில் நாட்டங்களும், மத்தியஸ்தம் செய்தலும், அஞ்சாமையும், கோபமும், அனைவரிடத்திலும் நட்பும், செல்வத்தில் ஓரளவு நாட்டமும், வாழ்வியில் இன்பங்களை முறையுடன் அனுபவித்தலும் ஏற்படும்.

மீனம் இராசி ; கூடுதலான சுயநலமும், எதையும் புரிந்து கொள்ளுதலும், செல்வக்குறைவும், பங்குதாரரின் இழப்பும், அரசினர் பகையும், பெண்களினால் துன்பமடைதலும், தனது பெருமை பேசுவதில் விருப்பமும், எண்ணங்களில் குழப்பமும் உடையவராவார்.

கி.பி 09-04-1981 மாலை 16-01 இ.பொ.நே.முதல் 11-04-1981 மாலை 20-01 வரை உண்மைக் கோள்கள் ஏழும் உபய இராசிகளில் இருந்துள்ளன. இந் நாட்களில் நிழல் கோள்களான இராகு,கேதுக்கள் உபய இராசிகளில் இல்லை.  ( மீன இராசியில் சூ,செ,பு,சுக்கிரனும், மிதுன இராசியில் சந்திரனும், கன்னி இராசியில் குருவும்,சனியும் இருந்துள்ளன…..

இவ்வாறு கோள்கள் அனைத்தும் சரம் அல்லது ஸ்திரம் அல்லது உபய இராசியில் இருப்பது மிகவும் அபூர்வமாக ஏற்படும். அதிலும் அவ்வகையான சாதகங்களைக் காண்பதும் மிகவும் அபூர்வமாகும். நன்றி ….நாளை சந்திப்போம்……


Professor Dr.T.Vimalan. Ph.D…………………….01-04-2015.