Wednesday 26 November 2014

சங்கத்தமிழில் வானசாத்திரமா ? சோதிடசாத்திரமா ? 25-11-2014 # astrology # astronomy

அன்புடையீர் வணக்கம். மீண்டும் எனது blogspot ல் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இந்திய வானசாத்திரம் / சோதிடசாத்திரம் வரலாறு பற்றி ஒரு சிறிய விளக்கத்தினை இங்கு உங்கள் முன் வைக்கிறேன். இந்திய வானசாத்திரம் / சோதிடசாத்திரம் முழுவதும் வடமொழியான ஸமஸ்கிருதமாகும். மற்ற இந்திய மொழிகளில் எந்த அளவிற்கு தொடர்புள்ளது என்று அறியமுடியவில்லை. # TAMIL ஆனால் ஒருசில தமிழர்கள் சங்கத்தமிழ் காலங்களில் வானசாத்திரம் இருந்ததாகக் கருதுகிறார்கள். அவ்வாறு ஏதும் இல்லை என்பதற்கு ஆதாரமாக இங்கு ஸமஸ்கிருதத்தில் உள்ள வானசாத்திர அறிஞர்களின் பெயர்கள், அவர்கள் எழுதி தற்பொழுது உள்ள நூல்களின் விபரங்களும் கொடுக்கப்படுகின்றன. அதேபொல் சங்கத்தமிழில் முழுமைபெற்ற வானசாத்திர நூல்கள் எழுதவில்லை என்பதற்கு விளக்கமும் அளிக்கப்படுகிறது.
சமஸ்கிருத வானசாத்திர அறிஞர்களும். நூல்களும்.
1.ஆர்யபட்டா   -கி.பி.476 ஆம் ஆண்டில் வாழ்ந்துள்ளார். இவர் ஆர்யபட்டீயம் என்ற வானசாத்திர நூலை  கி.பி.499 ல்எழுதியுள்ளார்.
2. லல்லா : கி.பி.498 ல் பிறந்துள்ளார். ஸிஸ்யாதி விருத்திதம் என்ற வானசாத்திர நூலும், பதிகணிதம் என்ற கணித நூலையும் எழுதியுள்ளார். ஸிஸ்யாதி விருத்திதம் நூலில் இரண்டு பிரிவுகள் உள்ளன.அவை 1.கணிதத்யாயம்.2. கோளத்யாயம்.ஆகும். இவர் முகூர்த்தம்,பிரஸ்னம்,போன்ற சோதிட நூல்களையும் இயற்றியுள்ளார்.
3.வராகமிகிரர் ;இவர் இறந்த ஆண்டு கி.பி.587 என்று குறிப்பிடுகின்றனர். பஞ்சசித்தாந்திகா என்ற வானசாத்திர நூலை இயற்றியுள்ளார். பிருகத்சாதகம். பிருகத்சம்கிதா, யோகயாத்ரா, லகுசாதகம், விவாகபடலம், பிரஸ்ன மகோதாதி, பிரஸ்னசந்திரிகா, தைவக்ஞவல்லபம், ஆகிய சோதிட நூல்களையும் எழுதியுள்ளார்.
4.பாஸ்கரா-1. ஆர்யபட்டீயம் நூலை விளக்கியுள்ளார். கி.பி.600ல் பிறந்ததாகக் கருதப்படுகிறது. மகாபாஸ்கரியம்,லகுபாஸ்கரியம் என்ற கிரக கணித வானசாத்திர நூல்களை எழுதியுள்ளார். இவர் நூலை அனேக வானசாத்திர அறிஞர்கள்மேற்கோள்காட்டியுள்ளனர்.(சங்கரநாராயண,உதயதிவாகர, சூர்யதேவா.மகிபட்டா,பரமேஸ்வரா, நீலகண்டர்)
5.பிரம்ம குப்தா- கி.பி.600ல் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றனர். இவர் பிரம்ம ஸ்புடசித்தாந்தம், கண்டகாத்யாக என்ற இரண்டு வானசாத்திர நூல்களை எழுதியுள்ளார். ஒன்றை கி.பி.630லும்,மற்றொன்றை கி.பி.665லும் எழுதியுள்ளார்.
6.சங்கர நாராயண- கி.பி.869ல் கேரளாவில் வாழ்ந்துள்ளார். லகுபாஸ்கரியம் வானசாத்திர நூலிற்கு விளக்கம் எழுதியுள்ளார். கேரளாவில் கொல்லத்தில் பிறந்த இவர் மகோதயபுரம் தலைநகர், குலசேகரத்தில் அரசர் ரவிவர்மாவின் வானசாத்திரம்,சோதிடவியல் ஆலோசகராக இருந்துள்ளார். கோளரங்கத்தை ஏற்படுத்தியும் உள்ளார்.
7.வதேஸ்வரா- கி.பி.880ல் பிறந்துள்ளார். கி.பி.904ல் வதேஸ்வர சித்தாந்தம் என்ற வானசாத்திர நூலை எழுதியுள்ளார். சூர்யசித்தாந்தம் (ஸிஸ்யாதி விருத்திதம்) பிரம்மஸ்புடசித்தாந்தம், கண்டகாத்யாயம், நூல்களை ஆராய்ந்து கருத்துக்களை தனது நூலில் பதிந்துள்ளார்.
8.மஞ்ஜாலா- லகுமானஸம் என்ற நூலை எழுதியுள்ளார். அந்நூலில் மத்யமதிகாரம், ஸ்பஸ்டமதிகாரம், தித்யாதிகாரம், திரிபிரஸ்னதிகாரம். கிரகயுத்த அதிகாரம்,கிரகணதிகாரம், சிரிங்கோண்ணதிகாரம், என்று பிரித்து எழுதியுள்ளார்.
9.பிர்துதகஸ்வாமி- கி.பி.1040ல் வாழ்ந்துள்ளார். பிரம்மகுப்தாவின் பிரம்ம ஸ்புட சித்தாந்தத்திற்கு வியாக்யானம் எழுதியுள்ளார். அதில் கோலாத்யாயத்திற்கும்,கண்டகாத்யாயத்திற்கும் சேர்த்து 5300பாடல்களை எழுதியுள்ளார்.
10. ஆர்யபட்டா-2 :கி.பி 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்துள்ளார். ஆர்ய சித்தாந்தம் என்ற வானசாத்திர நூலை எழுதியுள்ளார். இதில் கோள்களின் நகர்தல், அல்ஜிப்ரா,கணிதங்கள் உள்ளன.
11. ஸிரிபதி- கி.பி.999ல் பிறந்துள்ளார். தீக்கோடிகரணம் என்ற நூலில் கிரகணகணிதங்களை விளக்கியுள்ளார். இவர் சோதிடநூல்களையும், வானசாத்திர நூல்களையும் எழுதியுள்ளார். அவை ஜாதகபத்ததி, சோதிச ரத்னமாலா, தைவக்ஞவல்லபம்,சித்தாந்தசேகரம், துருவமானசகரணம், கணிததிலகம்,பீஜகணிதம்,ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
12.போஜராஜன் –கி.பி.1000-1060,இவர் எட்டு சோதிடநூல்களை எழுதியுள்ளார். அவை வித்வஜ்னவல்லபம், இராஜமார்த்தாண்டம்,பிருகத்ராஜமார்த்தாண்டம், வியவகார சமுச்யம்,பீமபராக்ரமம்,புஜபலநிபந்தம், பூபாலசமுச்யம், அதித்ய பிரதாப சித்தாந்தம் ஆகும்.
13. தஸ பலா-அரசர்- கி.பி.1058ல் ராஜமிகாண்ககர்ணம் என்ற நூலை எழுதியுள்ளார். பல நூற்களின் கருத்துக்களை மறுத்து மேசசங்ராந்தி,திதிசுத்தி, போன்றவற்றை விளக்கியுள்ளார்.
14. பிரம்மதேவா- கி.பி.1092ல் கரணபிரகாச என்ற நூலை எழுதியுள்ளார். இந்நூல் பஞ்சாங்கத்தை தயாரிப்பதற்கான கணிதங்களுடையதாகும். ஆர்ய பட்டீயத்தை தழுவி எழுதியதாகும்.
15, சதானந்தா- கி.பி.1099ல் பாஸ்வதி என்ற வானசாத்திர நூலை எழுதியுள்ளார் இந்நூல் அனைத்து வானசாத்திர மாணவர்களுக்கும் பயன் படக்கூடியதாக உள்ளது.இந்நூல் எட்டு பகுதியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. துருவதிகாரம், கிரகதுருவதிகாரம்,பஞ்சாங்கஸ்புடதிகாரம்.திதி பிரஸ்ன அதிகாரம், சந்திர கிரகணதிகாரம்,சூர்யகிரகணதிகாரம், பரிலக்னதிகாரம். என்பதாகும்.
16.பாஸ்கரா-2 ;கி.பி.1114-1206 –புகழ்பெற்ற சித்தாந்த சிரோன்மணி என்ற வான சாத்திர நூலை எழுதியுள்ளார். மேலும் லீலாவதி, பீஜகணிதம், கரணகுதூகலம் வஸிஸ்டதுல்யம், சர்வதோபத்ரயந்திரம், ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.
17.ஸிரிதரா- கி.பி 1227ல் லகுகேசரசித்தி என்ற கோள்களின் நிலைகளைக் கூறும் நூலை எழுதியுள்ளார்.
18. பரமேஸ்வரா- கி.பி.1353ல் கேரளாவில் வாழ்ந்துள்ளார். இவர்,திருக்கணிதம், கோளதீபிகா, வாக்யகரணம்,கிரகணமந்தனம், கிரகணநியாயதீபிகா, கிரகணாஸ்டகம், அதேபோல்,ஆசார்யசங்கிரக,ஜாதபத்ததி போன்ற சோதிட நூல்களையும் எழுதியுள்ளார்.
20. தாமோதரன் –கி.பி.1417ல் கரணங்களைக் குறிக்கும் வானசாத்திர நூலான பாததுல்யத்தை எழுதியுள்ளார்.
21. கங்காதர- கி.பி.1434ல் சந்திரமானபீதனா என்ற 200 பாடல்கள் கொண்ட வானசாத்திர நூலை எழுதியுள்ளார்.
22. நீலகண்ட சோமயாஜி- கி.பி. 1443ல்கேரளாவில் பிறந்துள்ளார். கோளசரம், சித்தாந்த தர்பனா, தந்ரசங்கிரகா, கிரகணநிர்ணயா, சந்த்ரசாயகணிதம், ஆர்யபட்டீய பாஸ்யம், சுந்தர்ராஜ பிரஸ்னோத்ரம்,(வரருசியின் வாக்ய பஞ்சாங்க கணிதத்திற்குவிளக்கம்)ஆகிய வானசாத்திர நூல்களை எழுதியுள்ளார்.
23. கேசவ தைவக்ஞர்- கி.பி.1496ல் கிரக கௌதுகம் என்ற நூலை எழுதியுள்ளார். திதிசித்தி, வர்ஸகிரகசித்தி, ஜாதகபத்ததி. தாஜகபத்ததி,முகூர்த்த தத்துவம், கணிததீபிகா, சித்தாதவாஸச பாடகம், காயஸ்ததி,தர்மபத்ததி,குண்டஸ்டகபடலம்.போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.
24. சித்ரபானு- கி.பி.1475-1550ல் வாழ்ந்துள்ளார். தனது 55 ஆவது வயதில் கரணாமிர்தம் என்ற நூலை எழுதியுள்ளார். இது பரமேஸ்வரரின் திருக்கணித முரை பஞ்சாங்கத்திற்குரிய நூலாகும். 4 அத்தியாத்தில் 134 பாடல்கள் கொண்டதாகும்.
25. மகரந்தம்- வாரணாசியில் வாழ்ந்துள்ளார். கி.பி.1478ல் மகரந்தசாரணி என்ற  வானசாத்திர நூலை எழுதியுள்ளார்.
26. கணேச தைவக்ஞர்- கி.பி.1490ல் பிறந்துள்ளார். இவருடைய கிரகலாகவ நூல் 1520 லெழுதப்பட்டதாகும். சித்தாந்தசிரோன்மணிதீகா,தர்ஜனியந்திரம் மற்ற வானசாத்திரநூல்களாகும்.
27. சூர்யதாஸ- கி.பி.1505ல் சித்தாந்தசுந்தரம், பீஜகணிதம், லீலாவதிதீகா, ஆகிய வானசாத்திர நூல்களை எழுதியுள்ளார்.  
மேலே கூறியவர்களைப்போல், விஸ்வநாதா,ஆனந்ததைவக்ஞர்-2,ரங்கனாதர், கிருஸ்ணதைவக்ஞர்( மாமன்னர் ஜஹாங்கீர் அரண்மனைச் வானசாத்திரி, சோதிடரும் ஆவார்,கி.பி-1605-1627 வரை),கோவிந்தர்,நரசிம்மர் முனீச்வரா, கமலாகரா,மணிரமா பொன்ற பல வானசாத்திர அறிஞர்கள் வாழ்ந்துள்ளனர். இவர்கள் எழுதிய வானசாத்திர நூல்கள், சோதிடசாத்திர நூல்களனைத்தும் இப்பொழுதும்கிடைக்கின்றன.இவைஸமஸ்கிருதகல்லூரிகள்,பல்கலைக்கழகங்கள்.ஆராய்ச்சி அமைப்புகளில் காணலாம்.ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களும் உள்ளன. சென்னை அடையாறு அன்னிபெசண்ட் தியாசபிகல் நூலகத்திலும் காணலாம்.
நான் வடமொழி வானசாத்திர நூல்கள் மற்றும் சோதிடசாத்திர அறிஞர்களை கி.பி 500லிருந்து. கி.பி.1600 வரைக்கும் பட்டியல் போட்டு விளக்கியுள்ளேன். இன்னமும் விளக்கலாம்.
இதே போல் சங்கத் தமிழர்களின் வானசாத்திர நூல்களையும், சோதிடசாத்திர நூல்களையும் பட்டியல் போட முடியாது. ஒரு நூல் கூடகிடையாது என்பது தான் உண்மையாகும்.
சங்ககால தமிழ் வானசாத்திர நூல்கள் இன்றுவரைக் கண்டுபிடிக்கப் படவில்லை.சோதிட நூலும் இல்லை.
ஒருசில தமிழறிஞர்கள இலக்கியத்தில் சோதிடம்,காலக்கணிதம் என்றெல்லாம் நூல்கள் எழுதியுள்ளனர். அவற்றில் சங்ககாலப்பாடல்களில் நட்சத்திரம், திதி, நேரக்கணிதம்,முகூர்த்தநேரம் போன்ற சாதாரண செய்திகளைத்தொகுத்து வெளியிட்டுள்ளனர். இவற்றைக் கொண்டு பஞ்சாங்கம் கணிப்பதற்காண எந்த ஒரு கணிதமும் கிடையாது. சாதகக் கட்டமும் போடமுடியாது.தமிழுக்கு முழுமைபெற்ற வானசாத்திரத்தைக் கணிக்கும் நூல் ஒன்று கூட காணக்கிடைக்க வில்லை என்பது வருத்தமான செய்தியாகவுள்ளது. வானசாத்திரமே இல்லாத பொழுது அதை அடிப்படையாகக் கொண்டு கணிக்கும் சோதிட சாத்திரநூல் எவ்வாறு உருவாகியிருக்கமுடியும். எனவே சங்ககாலதமிழ் முழுமை பெற்ற வானசாத்திர நூல்கள் எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது. ( இன்னும் சொல்லப்போனால். நம்மவர் தமிழாண்டு என்று கூறுகின்றனரே அவை தமிழல்ல. பிரபவ,விபவ,சுக்கில,பிரமோதூத, போன்ற அறுபது ஆண்டுப் பெயர்களும் ஸமஸ்கிருத ஆண்டுப்பெயர்களாகும். தமிழில் ஒரு ஆண்டுப்பெயர்கூட கிடையாது.) ஆனால் தமிழ் மொழியில் உள்ள திருக்குறள் போல் உலகப்பொதுமறை எந்த மொழியிலும் கிடையாது.
மிக்க நன்றி.நன்றி.நன்றி.                     பேராசிரியர். விமலன். 
                                                            25-11-2014