Wednesday 22 October 2014

இந்து சமயம் - அறிந்து கொள்ளுங்கள் -7---22/10/2014

இந்தோ-ஆரியர் ; உலகத்தின் தொன்மையான வைதீக சமயம்,சனாதன சமயம் என்று புகழப்படுகிற இந்து சமயத்தை தோற்றுவித்தவர்கள் இந்தோ- ஆரியர்கள் ஆவர்.இந்துகுஸ் மலைப்பகுதிகளிலும்,  சிந்து நதிகளின் நிலப்              பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டிருந்த மக்களிடம் இந்தோ-ஈரானியர்கள் குடி பெயர்ந்துள்ளனர். அக்குடிப்பெயர்ச்சியினால் ஏற்கனவே இருந்த இறைவழி பாட்டு அமைப்புகளை மாற்றினர். தங்களுடைய கடவுள்கள் அனைத்து அச்சங்களையும் அழிக்கக்கூடியவர்கள் என்றனர். அதன்படி தாங்கள் ஏற்கனவே ஈரான் பகுதிகளில் அறிந்து கொண்ட இறை வழிபாட்டு அமைப்பையும் இணைத்து புதிய கடவுளர்களையும்,வழிபாட்டு விதிகளையும் ஏற்படுத்தினர். அவற்றை மந்திர சொற்களாக உருவாக்கினர்.அச்சொற்களுக்கு
உரிய மொழியாக சமஸ்கிருதம் என்ற பெயர் வழங்கப்பட்டது. இம்மொழியில் தான் அனைத்து இறை வழிபாட்டு மந்திரங்களுக்கும் மூலமாகத்திகழும் வேதங்கள் உருவாக்கப்பஹுட்டன. கி.மு இரண்டாயிரத்திற்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்ட இந்து சமய வேதங்கள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒரே காலங்களில் உருவாக்கப் பட்டவையல்ல.
இந்து சமய வேதங்கள். இந்துக்களின் புனிதமான நூல்களில் மிகவும் பழமையானது இருக்கு வேத நூலாகும். இந்நூல்களில் உள்ள மந்திரச் சொற்களனைத்தும் உருவமற்ற இறைவர்களை வழிபடும் அமைப்பாகும். உலகில் இன்றளவும் உருமற்ற இறைவழிபாட்டுடைய சமயமாக இந்துசமயம் திகழுகிறது. இக்கருத்து நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ஆனால் ஆய்ந்து நோக்கினால் உண்மை புலனாகும். அதேபோல் மாமிசத்தை உண்ணும் சமயமும் ஆகும். எப்படியெனில், இந்து சமய வழிபாடு அக்னி குண்டம் என்று கூறப்படும் வேள்வி வழிபாடு ஆகும். இதில் அக்னி வளர்த்து அதில் உயிர்ப்பழி கொடுத்து ,மந்திரங்கள் ஓதப்பட்டு இறை வணக்கம் செய்யப்படும்.இவ்வாறுஅக்னி வளர்ப்பதில் சில விலங்குகள் பலியிடப்படும். அவற்றில் பசு, யாகத்திற்கு பலியிடப்படும் உயிர்களில் முதன்மையான தாகும். பசு கிடைக்கவில்லையெனில்,மான்போன்ற சைவ விலங்குகள் பலியிடப்படும். வேள்வி முடிந்த பின்னர் அக்னிகுண்டத்தை இடித்துவிடவேண்டும். அதெ அக்னி குண்டத்தில் திரும்பவும் வேள்வி நடத்தப்படவில்லை. இறைவழிபாட்டிற்கு என்று ஒரு கோயிலும் கட்டப்படவில்லை. நாம் காணும் கோயில்கள் அனைத்தும் கி.பி.க்குப் பின்னர் கட்டப்பட்டதாகும். இக்கோயில்களில்  உள்ள வழிபாடுகள் அனைத்தும் இந்து சமயத்தின் வேதவழிபாட்டு மந்திரங்களும் அல்ல.
எனவே நம்முடைய இந்து சமயத்தில் உருவ வழிபாடும் இல்லை. கோயில் வழிபாடும் இல்லை. பின்னர் எப்படி உருவ வழிபாடு ஏற்பட்டது? கி.மு 2000க்கும் --- கி.பிக்கும் இடையில் நடந்தது என்ன? வேதங்களில் என்ன கூறப்பட்டுள்ளன போன்ற பல்வேறு வினாக்களுக்கு விடைகாணலாம்.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.