Monday 22 September 2014

இந்து சமயம்-அறிந்து கொள்ளுங்கள்.-3

கடவுள்-தொடர்ச்சி. இயற்கையை வணங்கிய மானுடம், பின்னர் தனக்கு தீமையை கொடுக்கும் இயற்கை விளைவுகளையும் வழி படத் தொடங்கினர். அதனால் நில நடுக்கம்,புயல்காற்று,இடி,மின்னல்,பெருவெள்ளம்,நெருப்பு, போன்றவற்றை ஏற்படுத்தும் வானம்,நிலம்,காற்று,நீர்,நெருப்பு ஆகியவை கடவுளாக ஏற்படுத்தப்பட்டன. இதனடிப்படையில் மானுடத்திற்கு அச்சத்தை கொடுக்கும் அனைத்தும் கடவுளாக்கப்பட்டன. அதே போல் அச்சத்திலிருந்து காக்கும் அனைத்தும் கடவுளாக்கப்பட்டது. எ-கா. காட்டுப்பன்றி கடவுளாக்கப் பட்டது. அதை கொலை செய்யும் கூர்மையான ஆயுதமும் கடவுளாக்கப் பட்டது.( இதனடிப்படையிலேயே இன்று சைவ சமயத்தினரும்,வைணவ சமயத்தினரும் வணங்கும் கடவுள்களைக் காணமுடியும். காளைமாடு-நந்தி, நாய்-காலபைரவர், பாம்பு-ஆதிசேசன், சிங்கம்,புலி,குரங்கு,மயில்,கருடன், யானை,போன்று பல்வேறு விலங்குகள் இறைவனுக்கு கீழ் கொண்டு செல்லப்பட்டு வழிபாடும் செய்யப்படுகின்றன. இவை அனைத்தும் இறைவனுக்கு கட்டுப்பட்டு இருப்பதால் அச்சம் தவிர்த்து வாழ்க்கையை நடத்துங்கள் என்று மானுடத்திற்கு உணர்த்தப்பட்டன. அதேபோல் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் விலங்கினங்களால் ஆபத்து ஏற்படுமானால் அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் ஆயுதமும் கடவுளாக்கப்பட்டது. சக்திவேல். சூலாயுதம்,சக்கராயுதம்,அரிவாள்,கத்தி,போன்றவையாகும்.) இவற்றின் அடிப்படையிலேயே கடவுள் வழிபாடுகள் தோன்றின.

கலாச்சாரம். இந்தியர்களின் கலாச்சாரம் இனக்குழு வாழ்விலிருந்து தொடங்குகிறது. பகுத்தறிவற்ற இனக்குழு வாழ்வில் கடவுள்கள் ஏற்படுத்தப்படவில்லை.மாறாக குழுவின் தலைமைக்கு கட்டுப்படுவர்.இங்கு பெரியதான சட்டங்கள் இல்லாததால் கலாச்சாரமான வாழ்வமைப்பு இல்லை.படிப்டியான பகுத்தறிவு வளர்ச்சியினால் சட்டங்கள் ஏற்படுத்தப் பட்டன. சட்டங்கள் அனைத்தும் வாழ்வியலை மையமாகக் கொண்டதால் முறையான கலாச்சார வாழ்வு ஏற்பட்டது. சட்டங்கள் அனைத்தும் தலைமைக்குகீழ் கொண்டு செல்லப்பட்டதால் வரையறையும், மறுவரையறையும் ஏற்பட்டுக்கொண்டேயிருக்கும். இவ்வாறு ஒவ்வொரு சூழ்நிலைக்குத்தகுந்தாற்போல் மானுட வாழ்விற்கு தேவையான விதிகளை ஏற்படுத்தி வாழ்வதே கலாச்சார வாழ்வமைப்பாகும். இவ்வாறே இந்திய இனக்குழு மக்களும் சூழ்நிலைக்குத்தகுந்தாற்போல் விதிகளை ஏற்படுத்தி, உலகமே வியக்கும் இந்திய கலாச்சாரத்திற்கு வித்திட்டுள்ளனர்.